சரிபார்க்காமல் அவசர அவசரமாக திரையிடப்பட்டதா? 'சிங்கப்பெண்' விழாவில் பெரும் குளறுபடி..!

 
1

சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப்படையை நேற்று துவக்கி வைத்தார்  முதல்வர் விஜய். 

இந்நிலையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழாவில், அரசு சார்பில் வெளியிடப்பட்ட (AI) முன்னோட்ட வீடியோவில் அடுக்கடுக்கான தவறுகள் இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைப்பதற்கு முன்பாக, இந்த ஏஐ (AI) வீடியோ திரையிடப்பட்டது. ஆனால், அரசு வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ வீடியோவிலேயே இத்தனை கடுமையான குளறுபடிகளா எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

குறிப்பாக, அந்த ஏஐ வீடியோவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையே  தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, 'தமிழ்நாடு அரசு' என்ற வார்த்தை பாதி தமிழிலும், மீதி வேறு ஒரு மொழியிலும் சிதைந்து இடம் பெற்றிருந்தது. 

இதுமட்டுமின்றி, வீடியோவில் காட்டப்பட்ட 'ஆலந்தூர் மெட்ரோ ரயில்' நிலையத்தின் பெயரும் மிகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவ்வளவு பெரிய மாநில அளவிலான அரசு விழாவில் வெளியிடப்படும் ஒரு வீடியோவில், இத்தனை தவறுகளா ..? இருந்தும் அதனைச் சரிபார்க்காமல் அப்படியே அலட்சியமாக வெளியிட்டது ஏன்..? அவசர அவசரமாக திரையிடப்பட்டதா..?  எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் பலத்த கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.