நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா??

 
school

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் எனவும்,  திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நாளை அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tomorrow school  Open

அதே போல, 13.03.2023 அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று  கூறப்பட்டுள்ளது.