பள்ளிகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை அறிவிப்பு..!!

 
school

இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி எல்லைக்குட்பட்ட பள்ளி வளாகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவுப்பணிகளை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேபோல், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது