ஜனவரி மாதத்தில் மட்டும் 15 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. இது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஜனவரியில் முதல் 4 நாட்கள் அரையாண்டு விடுமுறையில் கழிந்துவிடும்.
அதன்பிறகு, ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் (ஜன.16) அரசு விடுமுறை ஆகும். ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் தினமும் அரசு விடுமுறையாகும். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் திங்கட்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்களுடன் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்களும், குடியரசு தினத்திற்காக சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை 4 நாட்களும் விடுமுறை கிடைக்கின்றன. தற்போதுள்ள அரையாண்டு விடுமுறை 4 நாட்கள் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளன. இத்துடன் வார விடுமுறை நாட்களையும் சேர்த்தால் 15 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகின்றன.
31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதால், மாணவர்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


