பள்ளிகளை திறக்க 2 தேதிகள் - அமைச்சர் சொன்ன தகவல்!!

 
anbil-mahesh-3

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

school

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 1ம் தேதியும்,  ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.   இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்து சூழலில் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும்,  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.

anbil magesh

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,  அதிகாரியுடன் ஆலோசனை செய்த பிறகு பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த தேதியில் முதலமைச்சர் தேர்வு செய்கிறாரோ அந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும். கோடை விடுமுறை என்பது மாணவர்களை  ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை காலம் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.