பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்- அன்பில் மகேஷ்
மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
*மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்!*
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) May 26, 2026
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான #DravidianModel ஆட்சியின் போது, கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி…
இதுதொடர்பாக அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில், “*மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான #DravidianModel ஆட்சியின் போது, கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது . இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெயிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் மிக முக்கியம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

