தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
Oct 16, 2025, 08:56 IST1760585187145
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. நேற்றிரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


