இன்று கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
Oct 26, 2026, 05:15 IST1792971900000
தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்ததால், பல மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கோவை நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. வாகன ஓட்டிகள் தடுமாறினர்.
புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (அக்.,26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

