பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!
Jul 19, 2026, 13:35 IST1784448359937
அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா, ஸ்பெயின் மோத உள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், சாம்பியனை கணிப்பது கடினமாக உள்ளது.
இன்று இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் போட்டியை கண்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு வசதியாக, கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) முதல்வர் வி.டி. சதீசன் விடுமுறை அறிவித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்கள், குறிப்பாக மாணவர்கள், விடுமுறை கோரி சமூக வலைதளத்தில் விடுத்த கோரிக்கைகள் வேகமாக பரவியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

