சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பள்ளி வேன்- பதற்றத்தில் பொதுமக்கள்
சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
சென்னை: வேளச்சேரியில் தனியார் பள்ளி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு#Chennai #Fire #Traffic #PettiKadaiMedia pic.twitter.com/snh9cKEtr4
— Petti Kadai Media (@PettiKadaimedia) July 16, 2026
சென்னை வேளச்சேரி கைவேலி அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணாக்கர்களை இறக்கிவிட்டு மீண்டும் பள்ளி திரும்பும் வழியில் திடீரென வாகனம் தீப்பிடித்தது. பள்ளி வாகன தீ விபத்து காரணமாக வேளச்சேரி - பள்ளிக்கரணை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனத்தில் மாணாக்கர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், போக்குவரத்தை சீர் செய்து எரிந்த நிலையில் இருந்த பள்ளி வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாகனம் எரிந்ததற்கான காரணம் என்ன என விசாரணை செய்துவருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

