பள்ளி சீருடை- லேடீஸ் டெய்லர்களிடம் ஒப்படைப்பு

 
சீருடை

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் டெய்லர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சோதனை அடிப்படையில் 100 பள்ளிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் டெய்லர்களுக்கு கிடைக்கும். பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,தமிழக அரசு சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r