பள்ளி மாணவிகளை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த காதலர்கள்! சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் பள்ளி மாணவி உட்பட மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 24ஆம் தேதி மாலை தோழியின் குடும்ப நிகழ்ச்சிக்காக தோழியின் வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடப்படுவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை சிறுமியின் பெற்றோர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன சிறுமியின் தோழியை விசாரிக்க சென்ற போது அவரும் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியின் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து தீவிரமாக தேடிய போது, பெரம்பூர் வீனஸ் அருகே உள்ள பழைய கட்டிடத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது அதிர்ச்சியாகினர். அங்கு காணாமல் போன சிறுமி உட்பட மூன்று சிறுமிகளை அவர்களது மூன்று காதலர்களுடன் தனிமையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மூன்று சிறுமிகளையும் மீட்ட போலீசார், சிறுவன் உட்பட மூன்று வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் கரி முல்லா, அபிசேக் மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கரி முல்லா என்பவர் மீது திருட்டு உள்ளிட்ட 11 வழக்குகள் மற்றும் சிறுவன் மீது ஆறு வழக்குகளும் அபிஷேக் மீது ஒரு வழக்கும் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் பெரம்பூரில் உள்ள பார்க் ஒன்றில் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக கூறி ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோலத்தான் தோழியின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து வருமாறும் இவர்கள் கூறியதன் பேரில் சிறுமிகள் வீட்டிலிருந்து வந்து வாலிபர்களுடன் தனிமையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வாலிபர்கள் கஞ்சா மற்றும் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருப்பதையும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட மூன்று சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு பின் முத்தையால் பேட்டையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உட்பட 3 பேர் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.