6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

 
rape

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 11 வயதான ஆறாம் வகுப்பு மாணவிக்கு கடந்த மாதம், அந்த பள்ளியின் கணித ஆசிரியர் சீனியப்பா என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு அந்த சிறுமி பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்த நிலையில், இது குறித்து தன்னுடைய உறவினரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தியிடம் பள்ளி தலைமையாசிரியர் மூலம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பள்ளி ஆசிரியரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு அந்த பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சீனியப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.