பள்ளியிலிருந்து 2 சிறுமிகள் உட்பட ஏழு பேர் வனத்திற்குள் சென்று மாயம்
அந்தியூர் அருகே பழங்குடியினர் பள்ளியிலிருந்து இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் வனப்பகுதிக்குள் சென்று மாயமாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தொங்காடை மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11),இந்த ஏழு மாணவர்களும் (இரண்டு சிறுமிகள் ஐந்து சிறுவர்கள்) அந்தியூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கிணத்தடி சோளகா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் படித்து வருகின்றனர்.7 பேரும் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு மீண்டும் திங்கட்கிழமை உண்டு உறைவிட பள்ளிக்கு வந்துள்ளனர்,
இந்த நிலையில் ஆறு வயது சிறுவன் தர்ஷன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியதை அடுத்து மேற்கண்ட ஆறு பேரும் சிறுவனை அழைத்துக் கொண்டு இன்று காலை ஆறு மணிக்கு பள்ளியிலிருந்து யாருக்கும் தெரிவிக்காமல் வனப் பகுதி வழியாக தங்களது சொந்த ஊரான கொங்காடை மலை கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்த போது சிறுவனால் நடக்க முடியாது காரணமாக சிறுமிகள் இருவரும் சிறுவனோடு இருந்துள்ளனர். மற்ற நான்கு மாணவர்கள் அருகில் உள்ள காக்கையனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வனப்பகுதிக்குள்ளேயே இருந்துள்ளனர்.தொடர்ந்து மாணவர்கள் வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டது குறித்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையம் போலீசார் மற்றும் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனப்பதிக்குள் போலீசார் மற்றும் வனத்துறையினர் நான்கைந்து குழுக்களாக சென்று தேடினர், மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டது. தொடர்ந்து சுமார் 5 மணி நேர தேடலுக்குப் பிறகு இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் கோட்டமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் மீட்டு அழைத்து வந்து கொண்டு உள்ளனர்.


