டெங்குக் காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

 
dengue

சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்குக் காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

dengue

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.  மாநிலம் முழுவதும் 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சூழலில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கபாலி  தெருவை சேர்ந்த ராஜ் பாலாஜி என்கின்ற சிறுவன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Death

 இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்த நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு  இருப்பது உறுதியானது . இதையடுத்து போரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ பாலாஜி மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று உயிரிழந்துள்ளார்.  டெங்கு காய்ச்சல் காரணமாக உடலில் உப்பு அதிகமாக இருந்தால் சிறுநீரகம் பாதிப்படைந்து சிறுவன் இருந்ததாக கூறப்படுகிறது.