தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 
rain school rain school

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.