கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான டானா புயல் இன்று இரவு கரையை கடக்க இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கள்ளியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று இரவு கன்னியாகுமரி, நாகர்கோவில், பார்வதிபுரம், ராமன் புதூர், செட்டிக்குளம், ஆசாரிப்பள்ளம், கோணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் ஆங்காங்கே சாலைகளும் சேதம் அடைந்து உள்ளது. மழையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.