கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் மழையையொட்டி கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே காற்றழுத்த தாழ்வு நிலையுடன் மிரட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.. மீனவர்கள் மீன்பிடிக்க 17ம் தேதி வரையில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மணிக்கு 55லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர் மழையை முன்னிட்டு கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.