சென்னை, திருவள்ளூர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Nov 2, 2026, 09:08 IST1793590721858
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடல் பகுதிகளில் முரசு புயல் மையம் கொண்டுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் முரசு புயல் மற்றும் கனமழை முன்னெஸ்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

