புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..

 
பள்ளிகள் விடுமுறை

இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக புதுவையில் இன்று முதல் 26ம் தேதி வரை, 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த புதிய வகை  வைரஸானது  15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை கூடுதல் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுத்தப்படுகிறது. ஆகையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.  

புதுச்சேரி  சட்டப்பேரவை

இதனையடுத்து புதுச்சேரி  கல்வியமைச்சர் நமச்சிவாயம், இன்று (மார்ச். 16 ) முதல் 26ம் தேதி வரை ஆரம்ப பள்ளி (1ம் வகுப்பு ) முதல் 8 ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக  அறிவித்தார்.   புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும்  வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.  இதேபோல் தெலங்கானா  மாநிலத்திலும் பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.