பள்ளிகளில் பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 
School Education

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் நீர்நிலைகளில் குளிக்க மாணவர்களை அனுமதிக்க கூடாதென பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மழையால் பள்ளியில் சில வகுப்பறைகள், கழிவறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகளில் மின்மோட்டார்கள் அமைந்துள்ள இட இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

திறந்தவெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகே மாணவர்கள் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழை பெய்யும்போது மரங்களின் கீழ் மாணவர்கள் ஒதுங்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.