பள்ளிக்கல்வித்துறை அதிரடி : அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது..!!

 
Q Q
அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், பிற வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) தேர்வு நிறைவு பெற உள்ளது.
தேர்வு முடிந்ததும், நாளை (புதன்கிழமை) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், விடுமுறை நாட்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.