கிழித்தெறியப்பட்ட திமுகவினரின் போலி முகத்திரை - வானதி சீனிவாசன் கடும் தாக்கு!!
தி.மு.கவினரின் வீட்டில் வேலை செய்யும் பட்டியலின சமூகத்தினருக்கே பாதுகாப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தனது வீட்டில் வேலை செய்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை சிகரெட்டால் சூடு வைத்தும் அடித்தும் கொடுமைபடுத்திய செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் தனது படிப்பிற்காக வேலை செய்த பெண்ணிற்கு ஊதியமும் சரியாக வழங்கப்படவில்லை. தமிழக காவல்துறை விரைவாக விசாரணை மேற்கொண்டு , குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.கவினரின் வீட்டில் வேலை செய்யும் பட்டியலின சமூகத்தினருக்கே பாதுகாப்பு இல்லை. பட்டியல் சமூகத்தினரின் உண்மையான பாதுகாவலர்கள் திமுகவினர் தான் எனும் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.என்று குறிப்பிட்டுள்ளார்.