"இணையத்தை மிரள வைக்கும் காட்சிகள்... 'ஓம்' திரைப்படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது!"
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இப்படம், தனுஷின் வித்தியாசமான கதாபாத்திரத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழ் திரைப்படத்தில் நடிப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
‘ஓம்’ திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’, ‘செஞ்சுடரே’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘ஃபா ஃபா ஃபா’ பாடல் வெளியிடப்பட்டது. சாய் அபயங்கர் மற்றும் தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலுக்கு தமிழ் ஆதவன் வரிகள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ‘ஓம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இளையத்தில் பட்டைய கிளப்பி வருகிறது. இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக...

