"எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்துக" - எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்

 
ravikumar

ஒன்றிய அரசில் தற்போதுள்ள எஸ்சி;எஸ்டி;ஓபிசி இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்று  எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Central Govt

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அரசியல் போராட்டமே தீர்வு தரும். உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இனி சட்டப் போராட்டம் நடத்த வழி இல்லை.அரசியல் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்தத் தீமையை வென்றாக வேண்டும் .அரசியல் போராட்டமே தீர்வு தரும்.உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இனி சட்டப் போராட்டம் நடத்த வழி இல்லை.அரசியல் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்தத் தீமையை வென்றாக வேண்டும்.  இட ஒதுக்கீட்டின் அளவை 75% ஆக உயர்த்துவோம் என கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவித்தது.அங்கு அக்கட்சி அடைந்திருக்கும் வெற்றிக்கு அதுவே முதன்மையான காரணம்! எனவே 2024 பொதுத்தேர்தலின் மையமான முழக்கமாக இந்த சமூகநீதி செயல்திட்டத்தை முன்னிறுத்துவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.