அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எஃப்ஐஆரை வெளியிட்டது யார்?- உச்ச நீதிமன்றம் கேள்வி

 
supreme court

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார்? முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது. FIR வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்திருந்தது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார்?முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? மாணவியின் தரவுகள் தற்போதும் சமூக வலைதளங்களில் உள்ளதா?எவ்வளவு நேரத்திற்கு அந்த ஆவணம் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்தது? என  உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மாணவியை பாதுகாக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருந்தோம். மத்திய அரசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது; காவல்துறை அதிகாரி என்ன செய்வார்? என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.