எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

வேட்பு மனுவில் முக்கிய தகவலை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில், சேலம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் பதில் தர எதிர்மனுதாரர், தமிழ்நாடு அரசு மிலானிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கில், மேல் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் புகார்தாரர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.