தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ!

 
SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று  தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது.

supreme court

இந்த நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை அதன் இணையத்தில் மார்ச் 15ந் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.