”எடப்பாடி பழனிசாமிக்கு காலம் முழுவதும் அடிமையாய் இருக்க முடியாது”- சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி குரல் குடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அடிமையாய் இருக்க முடியாது என யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், “அதிமுக ஒழிய வேண்டுமென்று "தவெக" நினைக்கவில்லை "எடப்பாடி பழனிச்சாமி" நினைக்கிறார். என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி குரல் குடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அடிமையாய் இருக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் அடிமை இல்லை. கடந்த ஆட்சியில் ஆளும் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதனால் எனது நண்பர் பெலிக்ஸ் மீதி 20 வழக்குகள் பதிவு செய்தனர். விலை உயர்ந்த கேமராக்கள், MAC Editing system, பறிமுதல் செய்தனர். இன்னமும் அவரால் அதனை பெற முடியவில்லை. இன்று தீண்ட தகாத கட்சியாய் அரசியல் அனாதையாகிவிட்டது திமுக. இ.பி.எஸ் மீது ஒரு ஊழல் வழக்கு கூட நிலுவையில் இல்லாதது ஏன்? வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல ஒரு இடத்திலாவது அ.தி.மு.க ஜெயிக்கிற நிலைமையில இருக்கா? அ.தி.மு.கவில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறுகிறார்கள்.
தவெக அரசு அவ்வளவு எளிதில் வீழ்ந்துவிடாது. எதிர்க்கட்சிகள் தவெகவை வீழ்த்த அத்தணை வேலையும் செய்வார்கள். என்னுடைய விசுவாசம், என்னுடைய ஆதரவு மக்களுக்காகதான். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டுமென எழுதினேன்... 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென விரும்பி எழுதினேன். 2021ல் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென விரும்பினேன். 2026ல் திமுக ஒழிய வேண்டுமென நினைத்தேன். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டுமென நினைத்தேன். ஆனால் மக்கள் தவெகவை வரவழைத்துள்ளனர். விஜய்யை கோட்டையில் அமர்த்தியது கரூர். அப்போது இருந்த அரசு, போதுமான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் விஜய் அவர்களால் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட முடியவில்லை. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார்.

