சவுக்கு சங்கர் வீடு, அலுவலகங்களில் காவல்துறை சோதனை!

 
tn

சவுக்கு சங்கர் வீடு மற்றும்  அலுவலகம் உள்ள இடங்களில் காவல்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

tn

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.  பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கஞ்சா சப்ளை நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து சவுக்கு சங்கரின் மதுரவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

tn
முன்னதாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிஷங்கர் மற்றும்  தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவையில் இருந்து சென்னைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.