ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்

 
tn

 தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்.

tn

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் தங்கி இருந்த விடுதி மற்றும் அவர் வந்த காரில் போலீசார் சோதனை நடத்தியதில்  409 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.  இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் மீதும் தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  இதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி மதுரையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் தனக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இரண்டு முறை விசாரணை நடந்தது.
 

tnஇந்நிலையில் சவுக்கு சங்கர்  மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். இதுவரை 2 முறை விசாரணைக்கு வந்துள்ள நிலையில், மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்.