"உதயநிதியை மகிழ்விக்கவே இதெல்லாம் நடக்குது".. சவுக்கு சங்கர் பரபரப்பு ட்வீட்

 
சவுக்கு சங்கர்

பெலிக்ஸின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி திருச்சி போலீசார் மனு தாக்கல் செய்து நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

Shavku Shankar case: YouTube channel editor Felix arrested | சவுக்கு சங்கர்  விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும், பெலிக்ஸ் ஜெரால்டும் சேர்ந்து நேர்காணல் செய்யக்கூடாது என்பதில் திருச்சி எஸ்பி வருண்குமார் மிகுந்த அக்கறை காட்டுகிறார். குறிப்பாக காவலில் இருந்த எங்கள் இருவரையும் பலமுறை மிரட்டினார். துணை முதல்வர் உதயநிதி தான் இதை செய்ய உத்தரவிட்டதாக அவர் கூறினார். பெலிக்ஸின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி திருச்சி போலீசார் மனு தாக்கல் செய்து நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தடை செய்த வழக்கில் ஜாமீனை எப்படி ரத்து செய்வது? உதயநிதி ஸ்டாலினை மகிழ்விக்கும் விரக்தியில், வருண் குமார், தமிழக காவல்துறையை நீதிமன்றத்தின் முன் வருத்தப்பட வைக்கிறார். இதை ஏன் அனுமதிக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் அந்த பதிவில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற அறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், “சைபர் கிரைம் பிரிவு-III, காவல் நிலைய குற்ற எண்.21/2024 பிரிவு 294(b), 353, 509, 114 IPC and 67 IT Act and 4 of TNPHW Act-ன் படியான வழக்கின் எதிரி-2, பெலிக்ஸ் ஜெரால்டு த/பெ ஞான பிரகாசம் என்பவர்க்கு Crl.M.P.No. 9863/2024, 22.05.2024-ஆம் நாள் இந்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக்கோரி மனுதாரர் கோடிலிங்கம் த/பெ கருப்பையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு, திருச்சி மாவட்டம், என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவானது Cri.M.P.No. 25456/2024 என கோப்பிற்கு எடுக்கப்பட்டு, இந்நீதிமன்றத்தில் வழக்கானது வருகின்ற 24.10.2024-ம் அன்று வாய்தா போடப்பட்டுள்ளது, எனவே அன்றைய தினம் நேரில் ஆஜராகி உமது விளக்கத்தினை அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.