முதலமைச்சரின் அலட்சியமே 66 பேரின் உயிரிழப்புக்கு காரணம்- சவுக்கு பரபரப்பு பேட்டி

 
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டத் அடுத்து, அவர் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “இரண்டு முறை குண்டர் சட்டத்தில் என்னை கைது செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் இல்லை. விமர்சனங்களை பார்த்து வளர்ந்தவர் இல்லை. தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி. பணியிலிருப்பவர் இறந்தால் கருணை அடிப்படையில் எப்படி வேலை கொடுப்பார்களோ... அதேபோல் கருணை அடிப்படையிலேயே அவருக்கு திமுக தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.  அதுபோலவே மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனது தாய், தந்தை, சவுக்கு மீடியா உள்ளிட்ட அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. DGP சங்கர் திவால் அவர்கள் சட்ட விரோதமாக மெத்தனால் கடத்த படுவதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிய படுத்தியுள்ளார் ஸ்டாலின் அதை கண்டுகொள்ளாததால் இன்று கள்ளக்குறிச்சியில் 66 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்து உள்ளனர். கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்..! " மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்” என்றார்.