கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: சவுக்கு சங்கர்
Jun 20, 2024, 17:00 IST1718883038871

மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது சவுக்கு சங்கர் கேமராவை பார்த்து, “தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்துள்ளது. காவல்துறை பொய் வழக்கு போட செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயம் ஒழிப்பதில் செலுத்தியிருந்தால் இன்று இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது. அரசியல் எதிரிகளை பலிவாங்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த மரணங்கள், அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். ” என்றார்.