தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் மனு
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். அண்மையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யபட்டது.
இந்நிலையில் தனக்கு எதிராக தமிழக அரசால் பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.