ஜாமின் கோரி சவுக்கு சங்கர் மனு

 
சவுக்கு

கஞ்சா வழக்கில் ஜாமின் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

savukku


பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை சிறையில் 
அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை நடத்தினர். கஞ்சா, செல்போன்,டேப், 2 லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


இந்நிலையில் கஞ்சா வழக்கில் ஜாமின் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.