சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை- சிறைத்துறை ஏடிஜிபி விளக்கம்

 
வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் விளக்கம் அளித்துள்ளார்.

Savukku' Shankar begins hunger strike, demands to be allowed visitors in  jail

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்,  சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல  நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

Image

இந்நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் யாரும் தாக்கவில்லை என சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் விளக்கம் அளித்துள்ளார். கோவை மத்திய சிறையில் எந்த கைதியும் தாக்கப்படவில்லை. தமிழகத்தில் எந்த சிறையிலும், எந்த கைதியையும் யாரும் தாக்குவது இல்லை என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் அளித்த புகாருக்கு சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் விளக்கம் அளித்துள்ளார்.