சவுக்கு சங்கரின் தாயார் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

 
வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

சவுக்கு சங்கரின் தாயார் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

Image

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் உதவி ஆயவாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, மே 4-ம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் சிறைக் காவலர்களால் தாக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.