சவுக்கு சங்கரை இயக்கியது அண்ணாமலை! போலீசில் புகார்

 
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இயக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Image


பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த மூன்றாம் தேதி கோவை சைபர் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சவுக்கு  சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இந்நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறித்த சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு உடந்தையாக இருந்த சவுக்கு மீடியா ஆசிரியர் முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காண்டீபன் புகார் அளித்துள்ளார். மேலும் இவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இயக்கியதாகவும் எனவே அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து மனு அளித்துள்ளார்.