சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு

 
எடப்பாடியின் பதற்றம் கவனிக்க வேண்டிய ஒன்று.. இதனால் ஓபிஎஸ்க்கு சாதகமான நிலைதான்.. சவுக்கு சங்கர்

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. 10 மணி நேர சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

tn


சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை நடத்தினர். கஞ்சா, செல்போன்,டேப், 2 லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கஞ்சா சப்ளை நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து சவுக்கு சங்கரின் மதுரவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.