யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!!

 
rrr

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் கைது செய்த சவுக்கு சங்கரை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவை அழைத்துச் சென்றனர். 

tn

யூடியூபர்  சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து  வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்தும் இவர் அவதூறாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதன் அடிப்படையில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து வருகின்றனர்.சென்றனர். 

tn

முன்னதாக  சவுக்கு சங்கருக்கு ஆதரவாக  எடப்பாடி பழனிசாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.