யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?- ஐகோர்ட்

 
யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?- ஐகோர்ட் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?- ஐகோர்ட்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.


பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். இதில், அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில் சவுக்கு சங்கர் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்? புகார் கொடுத்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், தெவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சவுக்கு சங்கருக்கு அறிவுறுத்தியுள்ளார்.