கையில் கட்டுடன் நீதிமன்றத்திற்கு வந்த சவுக்கு சங்கர்

 
சவுக்கு

மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.


யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மே 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் அவர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை விளக்கம் அளித்திருந்தது. இதையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரையில் மாவட்ட நீதி மன்றத்தில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் ஆஜராகி இருப்பது காவல்துறையால் சவுக்கு சந்தர் தாக்கப்பட்டார் என குற்றச்சாட்டு சொல்லப்பட்ட நிலையில்
தற்போது சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் ஆஜராகி இருப்பது அவருடைய குற்றச்சாட்டை ஊர்ஜிதம் செய்வதாக இருக்கிறது.