சவுக்கு சங்கரின் வலது கையை உடைத்திருக்கிறார்கள்! வழக்கறிஞர் குற்றச்சாட்டு

 
வழக்கறிஞர்

சவுக்கு சங்கரை சிறையில் கொடுமைப்படுத்தி கையை சிறை காவலர்கள் முறித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் உதவி ஆயவாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, மே 4-ம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் சிறைக் காவலர்களால் தாக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று கோவையில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில்,  “தமிழகம் போலீஸ் ஸ்டேட் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. போலீஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.. அன்னைக்கு கையெழுத்து போட்ட சவுக்கு சங்கர் இன்னைக்கு விரல் ரேகை வைத்தது ஏன்? அவரை அடித்திருக்கிறார்கள்... வலது கையை உடைத்திருக்கிறார்கள்... அவர் எதிர்க்காத அரசியல் வாதிகளே இல்லை… இது திட்டமிட்டே பழிவாங்கும் நடவடிக்கை… சவுக்கு  சங்கர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அவர் தாக்கப்படவில்லை என்றால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கலாம். எக்ஸ்ரே எடுக்க கூட அனுமதிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.