தேனி அழைத்து செல்லப்பட்டார் சவுக்கு சங்கர்!

 
savukku

கஞ்சா வழக்கில் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தேனி அழைத்து செல்லப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்தமே மாதம் 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். அவரை கோவை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதேபோல் தேனியில் அவர், தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைபொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விடுதலை மனு இன்னும் நிலுவையில் இருந்தபோதிலும், நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லாத நிலையிலும், அவரது வருகையை மன்னிப்புக் கோரும் மனு நேற்று காலை சுமார் 11 மணியளவில் எதிர்பாராத விதமாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் விளைவாக, உடனடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் தேனி அழைத்துச் செல்லப்பட்டார். சென்னையில் கைதான சவுக்கு சங்கர், தேனி அழைத்துச் செல்லப்பட்டார். கஞ்சா வழக்கு தொடர்பாக, தேனி நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டட நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.