சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

 
வழக்கறிஞர்

சிறையில் சவுக்கு சங்கரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் சராமரியாக தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

tn

யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் , காவலர்கள் குறித்தும் அவதூறாக கருத்தை தெரிவித்த காரணத்தினால் கோவை சைபர் கிரைம் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் . தேனி விடுதி  ஒன்றில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கரை போலீசார் அதிரடியாக கைது செய்து , கோவை அழைத்து வந்தனர்.  கோவை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுக்கு சங்கரை 5 போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 


இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது பிளாஸ்டிக் பைப் கொண்டு சிறை அதிகாரிகள் தாக்கி உள்ளதாகவும், சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்கியதில் சவுக்கு சங்கருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் சிரமப்பட்டு தான் நடக்கிறார் என்றும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார். அவரை தனிச் சிறையில் அடைத்துள்ளதாகவும் சவுக்கு சங்கரின் உயிருக்கு கோவை சிறையில் ஆபத்து உள்ளது என்றும் வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கோவையில் பேட்டியளித்துள்ளார். கோவை மத்திய சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.