Save The Date..! நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம்.. யாரை தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் நடிகை வனிதா விஜயகுமார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து கலக்கி வரும் வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார். ஏற்கனவே 3 திருமணங்கள் செய்துகொண்ட வனிதா, பின்னர் தனது திருமண வாழக்கையில் இருந்து விலகினார்.
2 மகள்களுடன் தனியாக வசித்து வனிதா கடந்த 2020ம் ஆண்டு பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் பீட்டர்பாலும் திடீரென மரணமடைந்தார். இதுதொடர்பாக பீட்டபால் மனைவி அளித்த புகாரின்பேரில் அப்போது சர்க்கைகளும் வெடித்தன. ஆனால் தன் குழந்தைகளுடன் தனியாகவே வசித்துவருவதாக வனிதா தெரிவித்தார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது நீண்ட கால நண்பரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை 4வதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். வருகிற அக்.5ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. இதனிடையே ராபர்ட் மாஸ்டரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SaveTheDate - Oct 05th 2024
— Nikil Murukan (@onlynikil) October 1, 2024
Details Soon..@vanithavijayku1 #Robert @onlynikil pic.twitter.com/6PRVRl7Qrn