மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை

 
tnt

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, மாவட்ட ஆட்சியர்களுடன்  இன்று ஆலோசனை நடத்துகிறார்.

tn

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.  தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 

election

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.