தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் - சத்யபிரதா சாஹூ

 
TNTT

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

virudhunagar ttn

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,   விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை;  தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடையவில்லை;  வீழ்த்தப்பட்டுள்ளார். தோல்வியை முழு மனதாக மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.  தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் இது தெரியும்.  திட்டமிடப்பட்டு சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டார் . அதற்கான ஆதாரங்கள் உள்ளது .விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்  என்றார். 

t

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,  தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தைதான் நாட முடியும்; விருதுநகர் தொகுதி தொடர்பான தேமுதிக புகார் இதுவரை வரவில்லை என்றார்.