இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு!

 
sahu

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
 
சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள மத்தியில் பேசிய சத்யபிரதா சாகு கூறுகையில்,  தமிழ்நாட்டில் மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். 

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி 2-வது இடத்திலும் உள்ளது.  சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர்.  கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,62,612 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாள் முன் வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.